ரிப்பன் கட்டிடத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை மையம்


ரிப்பன் கட்டிடத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை மையம்
x
தினத்தந்தி 5 Jan 2022 12:04 AM GMT (Updated: 2022-01-05T07:58:19+05:30)

ரிப்பன் கட்டிடத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை மையம் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கான முதல் கட்ட உடற்பரிசோதனை மையத்தை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-

சென்னையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வகை தொற்று பாதித்த நபர்களுக்கு முதல் கட்டமாக பரிசோதனை செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முதல்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டிடத்தில் தொலைபேசி ஆலோசனை மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story