சாமியார் காளிசரணை புனே போலீசார் காவலில் எடுத்து விசாரணை


படம்
x
படம்
தினத்தந்தி 5 Jan 2022 6:22 PM IST (Updated: 5 Jan 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக சத்தீஸ்கார் மாநில போலீசாரால் கைதான சாமியார் காளிசரணை, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் புனே போலீசார் காவலில் எடுத்து உள்ளனர்.

புனே,

மகாத்மா காந்தியை அவதூறாக பேசியதாக சத்தீஸ்கார் மாநில போலீசாரால் கைதான சாமியார் காளிசரணை, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் புனே போலீசார் காவலில் எடுத்து உள்ளனர். 

சாமியார் கைது 

அகோலாவை சேர்ந்த சாமியார் காளிசரண் மகாராஜ். இவர் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை கூறினார். மேலும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயை புகழ்ந்து பேசியுள்ளார். 
இது தொடர்பாக சத்தீஸ்கார் மற்றும் மராட்டிய மாநிலங்களில் காளிசரண் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சத்தீஸ்கார் மாநில போலீசார் கடந்த வாரம் சாமியார் காளிசரணை அதிரடியாக கைது செய்தனர். 

புனே நிகழ்ச்சி

முன்னதாக முகலாய தளபதி அப்சல்கான் சத்ரபதி சிவாஜியால் கொல்லப்பட்ட தினத்தை கொண்டாடும் “சிவ் பிரதாப் தின்” நிகழ்ச்சி கடந்த மாதம் 19-ந் தேதி புனேயில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாமியார் காளிசரண், வலதுசாரி தலைவர் மிலிந்த் ஏக்போதே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தியேந்திர குமார் மற்றும் சிலர் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், மக்களிடையே வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புனே போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். 

காவலில் எடுத்தனர்

இந்த வழக்கில் காளிசரணை காவலில் எடுத்து விசாரிக்க புனே போலீசார் ராயப்பூர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து புனே போலீசார் அவரை காவலில் எடுத்துள்ளனர். 
இது குறித்து புனே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் சத்தீஸ்கார் போலீசாரிடம் இருந்து காளிசரணை காவலில் எடுத்துள்ளோம். அவர் புனேவுக்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் விசாரணை நடத்தப்படும்” என்றார். 
-----------


Next Story