பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 7:36 PM IST (Updated: 5 Jan 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த கண்ணன். இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (வயது 35). இவர் வீட்டின் அருகே வைத்து அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான லிங்கம் மகன் சுடலை என்ற சூர்யா (24) என்பவர் அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து வந்தாராம். இதனை அந்தோணியம்மாள், அவரது கணவர் கண்டித்து உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த சுடலை, அந்தோணியம்மாளுக்கு கொலைமிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து சுடலையை கைது செய்தார்.

Next Story