ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 Jan 2022 8:30 PM IST (Updated: 5 Jan 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரே நாளில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஒரே நாளில் அதிகபட்சமாக 123 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா 2-வது அலையின் போது டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த டெல்டா வைரஸ் தற்போதும் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மட்டுமே ஓமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கு பெரும்பாலும் டெல்டா வைரஸ் பாதிப்பே ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர பகுதி மற்றும் கோவில்பட்டி பகுதியில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
கண்காணிப்பு
இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓமைக்ரானை விட, கொரோனா டெல்டா கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் மீண்டும் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று ஓமைக்ரான் பாதிப்பு குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் 56 ஆயிரத்து 931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  13 பேர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 56 ஆயிரத்து 179 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து 340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 412 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

Next Story