லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 5 Jan 2022 9:30 PM IST (Updated: 5 Jan 2022 9:30 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

கூடலூர்:
கம்பம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 42). லாரி டிரைவர். இவர் நேற்று காலை லாரியில் எம்-சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கம்பத்தில் இருந்து கேரளா நோக்கி குமுளி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார். குமுளி அருகே சுரங்கனாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை அருகே அவர் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் பாண்டியன் காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லாரிக்குள் சிக்கியிருந்த பாண்டியனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
லாரி கவிழ்ந்ததால் குமுளி மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. எம்-சாண்ட் மணலை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்சென்றதால் லாரி கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story