நாகை மாவட்டத்தில் 5½ லட்சம் வாக்காளர்கள்


நாகை மாவட்டத்தில் 5½ லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2022 9:45 PM IST (Updated: 5 Jan 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 5½ லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகப்பட்டினம்:-

நாகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 5½ லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். 

இறுதி வாக்காளர் பட்டியல்

நாகை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்ட சிறப்பு சுருக்கத்திருத்த பணிகள் நடந்தன. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- 
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகை சட்டசபை தொகுதியில் 221 வாக்குச்சாவடிகளும், கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் 203 வாக்குச்சாவடிகளும், வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 227 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 651 வாக்குச்சாவடிகள் உள்ளன.

5½ லட்சம் வாக்காளர்கள்

மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 866 ஆகும். 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 2, லட்சத்து 92 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 
இவ்வாறு அவர் கூறினார். 
நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது.

Next Story