சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 9:59 PM IST (Updated: 5 Jan 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:-

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலை பணியாளர் என பணியிட ஒப்புதல் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். 
சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும் பணிக்காலத்திலும் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மெழுகுவர்த்தி ஏந்தி...

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் கலந்து கொண்டு பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story