பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்


பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 10:07 PM IST (Updated: 5 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம் நடந்தது.

பென்னாகரம்:
பென்னாகரம் தாலுகா அலுவலகத்தின் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம் நடந்தது. இதற்கு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் பென்னாகரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள கள்ளிபுரம் கிழக்கு, கள்ளிபுரம் மேற்கு, அண்ண நகர் காலனி, கிருஷ்ணாபுரம், அம்பேத்கர் நகர் காலனி, ஏரங்காடு காட்டுக் கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோஷங்கள்  எழுப்பினர்.  அவர்களிடம் தாசில்தார் அசோக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்து அதற்கான கோப்புகள் அதிகாரிகளுக்கு ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story