திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி பலாத்காரம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி.ஐ. ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோட்டுச்சேரி, ஜன.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி.ஐ. ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு மாணவி
காரைக்கால் தலத்தெரு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 35). காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.யில் ஊழியராக (ஸ்டோர் கீப்பர்) பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு செல்லும் போது, ஐ.டி.ஐ. அருகில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே காதலாக மாறியதாக கூறப் படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட அருண், அவளது வீட்டுக்கு சென்றார். சிறுமி யிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவளை பாலியல் பலாத் காரம் செய்ததாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது அருண் அங்கிருந்து தப்பிஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை திரு-பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.
Related Tags :
Next Story