17 வயது சிறுமி பலாத்காரம்; தொழிலாளி போக்சோவில் கைது
17 வயது சிறுமி பலாத்காரம்; தொழிலாளி போக்சோவில் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் ஏராளமான நூற்பாலைகள் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு நூற்பாலையில் நெல்லையை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமி வேலை செய்து வந்தார். அதே மில்லில் வெண்ணந்தூரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) என்பவரும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் அந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த புகார் திருச்செங்கோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா விசாரணை நடத்தி 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Related Tags :
Next Story