கத்தி முனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது
கத்தி முனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது
வீரபாண்டி,
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சபரி (வயது 24). இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் பனியன் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இடுவம்பாளையம் ஆரம்ப மேல்நிலைப்பள்ளி சாலை வழியாக செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று சபரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்தனர். உடனே சபரி சத்தம் போட அப்பகுதியில் கடைகளில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பலரும் வண்டியை மறித்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த சஞ்சய் (20), மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்
Related Tags :
Next Story