கொடுக்கல்-வாங்கல் தகராறில் நர்சை அடித்து கொன்ற விவசாயி கைது


கொடுக்கல்-வாங்கல் தகராறில் நர்சை அடித்து கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 10:49 PM IST (Updated: 5 Jan 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அரசு நர்சு சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொடுக்கல்-வாங்கல் தகராறில் அவரை அடித்து ெகான்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

வத்தலக்குண்டு:

நர்சு அடித்து கொலை 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கண்ணன் நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 56). இவர், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இவர், வீட்டின் வெளியே உள்ள கழிப்பறை அருகே ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து சுப்புலட்சுமி மர்மமான முறையில் இறந்ததாக, வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் துப்புத்துலக்க சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி, ஷேக் அப்துல்லா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுப்புலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
விவசாயி கைது
 
சுப்புலட்சுமியை கொலை செய்த நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கொடுக்கல்-வாங்கல் தகராறில் அவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விருவீடு அருகே உள்ள கீழஅச்சனம்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெகதீஸ்வரன் (24) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான ஜெகதீஸ்வரனின் தந்தை முருகன், சுப்புலட்சுமியிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார். 

இதனால் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை வட்டியாக சுப்புலட்சுமிக்கு கொடுத்ததாக தெரிகிறது. 

இதனால் வேதனை அடைந்த ஜெகதீஸ்வரன், இது தொடர்பாக சுப்புலட்சுமியின் வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்தும், கற்களால் தாக்கியும் சுப்புலட்சுமியை ஜெகதீஸ்வரன் கொலை செய்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story