கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 15 முதல் 18 வயதுடைய 29,167 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய 29,167 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கொரோனா
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று வெளிநாடுகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை ஆகியவை மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 12 லட்சத்து 39 ஆயிரத்து 217 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 7 லட்சத்து 70 ஆயிரத்து 758 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயது
மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள் 86 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இவர்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 62 ஆயிரத்து 343 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 29 ஆயிரத்து 167 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடியே 20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story