சாராயம்-மது பாட்டில்கள் பறிமுதல், வாலிபர் கைது


சாராயம்-மது பாட்டில்கள் பறிமுதல், வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2022 11:05 PM IST (Updated: 5 Jan 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசாா் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

கொள்ளிடம், ஜன.6-
மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களை ேபாலீசாா் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
சாராயம் பறிமுதல்-வாலிபர் கைது
கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் ரோட்டில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் நேற்று சாலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர் காரைக்கால் திருநள்ளாறு மீனவர் காலனியை சேர்ந்த கார்த்திகேயன் (39) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் 250 சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவர் கடத்தி வந்த சாராயத்தையும், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story