தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீச்சு... கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? போலீசார் விசாரணை


தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீச்சு... கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jan 2022 11:14 PM IST (Updated: 6 Jan 2022 10:45 AM IST)
t-max-icont-min-icon

கூமத்து வாரியில் தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த ஆண் குழந்தை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகாடு,

வடகாடு அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கூமத்து வாரியில் நேற்று தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வடகாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பச்சிளம் குழந்தை உடலை மீட்டனர். 

மேலும் போலீசார் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

Next Story