தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 5 Jan 2022 11:39 PM IST (Updated: 5 Jan 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி ஆழ்வார்தோப்பு பீமநகர் உய்யகொண்டான் ஆற்றுப் பாலத்தை கடந்து செல்லும் வழியில் பக்காளி தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையம் அருகே அதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவற்றை அப்பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் கிளறி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.


சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை 
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் நடுப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி


பழுதடைந்த கழிப்பறை
திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு உறையூர் மாணிக்கம்பிள்ளை நூலகத்தின் அருகே உள்ள கழிப்பறை பழுதடைந்து நீண்ட காலமாக மூடியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பாதசாரிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
செல்வி, திருச்சி


எரியாத மின்விளக்குகள்
திருச்சி மாநகராட்சி 45-வது வார்டுக்குட்டபட்ட பொன்னகர் காமராஜபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட  மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செண்பகலெட்சுமி, திருச்சி


நாய்கள் தொல்லை
திருச்சி சுப்பிரமணியபுரம் மற்றும் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கூட்டம், கூட்டமாக இரவு நேரங்களில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது. மேலும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும்,  பின்னால் துரத்தி வந்து கடித்து விடுகிறது. இதனால் அவர்கள் சில நேரங்களில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 
சிவரஞ்சனி, திருச்சி 

Next Story