நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதல் காரணமாக விவசாயி கழுத்தை நெரித்து கொலை
நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதல் காரணமாக விவசாயி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதல் காரணமாக விவசாயி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே பையனப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சாமிபிள்ளை. இவரது மகன் அன்பழகன் (வயது 45) விவசாயி. இவரது மனைவி சரிதா (36). இவர்களுக்கு தென்னரசு, பூவரசு, இளவரசு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் தென்னரசு, பூவரசு ஆகிய இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சரிதாவுக்கு வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அன்பழகன் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். அப்போது அன்பழகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கழுத்தை நெரித்து கொலை
இந்த நிலையில் நேற்று காலை அன்பழகன் நிலத்தில் உள்ள வீட்டில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அன்பழகன் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்ப இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கள்ளக்காதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அன்பழகனின் தம்பி நந்திமலை (35) கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அன்பழகனின் மனைவி சரிதா உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story