மிரட்டி பணம் பறித்தவர் குத்திக்கொலை


மிரட்டி பணம் பறித்தவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 12:21 AM IST (Updated: 6 Jan 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

மிரட்டி பணம் பறித்தவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி
மிரட்டி பணம் பறித்தவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மிரட்டி பணம் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கீழ ஊருணி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). விடுதலைசிறுத்தைகள் கட்சி பிரமுகர். இவருடைய மகன் இறைச்சி கடை வைத்துள்ளார். இவரை மிரட்டி, அமராவதிபுதூரை சேர்ந்த ராஜ்குமார்(46) பணம் பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தந்தை கணேசனிடம் கூறினார். இதைதொடர்ந்து கணேசன், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த சுந்தரபாண்டியன்(42) ஆகியோர் ராஜ்குமாரை சந்தித்து இதுதொடர்பாக கேட்டனர். 
குத்திக்கொலை
அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணேசன், கத்தியால் ராஜ்குமாரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், சுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோரும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story