பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
மானாமதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
மானாமதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரிசுதொகுப்பு
மானாமதுரையில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கன்னர் தெருவில் நடைபெற்றது. பச்சரிசி, வெல்லம் உள்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை சுமார் 30 ஆயிரம் பேருக்கு அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, தாசில்தார், தமிழரசன், வட்டவழங்கல் அதிகாரி ரேவதி, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, துணை தலைவர் முத்துச்சாமி, நகர் செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாத்துரை, பொதுகுழு உறுப்பினர் ராஜாங்கம், தொண்டரணி துணை அமைப்பாளர் மூர்த்தி, மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், மானாமதுரை நகர நிர்வாகி ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் மலைச்சாமி, ராதா சிவசந்திரன், ஒன்றிய பிரதிநிதி ஜெயமூர்த்தி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் நாகராஜன், குருந்தகுளம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி அமைப்பாளர் பால்பாண்டியன் மாணவரணி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாக்குறுதி
கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பற்ற தனமாகவும், சிறுபிள்ளைத்தனத்தை போல ஆட்சியில் இருந்த காரணத்தினால் முறையான நிர்வாகம் நடைபெறவில்லை. கடந்த ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேலாக கடன் சுமையை வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.
இதையெல்லாம் காரணம் காட்டி மக்களுக்கு செய்ய முடியவில்லை கூறும் அளவிற்கு குறுகிய மனப்பான்மை கொண்ட முதல்-அமைச்சராக இல்லை. மக்களுக்கு தேவையான உதவிகளையும், தேர்தல் காலத்தில் கொடுத்த தான் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன் என்று செயல்பட்டு வருகிறார் என்றார்.
Related Tags :
Next Story