10 தொகுதிகளில் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 வாக்காளர்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
பேட்டி
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. எனவே தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப ்பட்டுஉள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 ஆகும். அதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 31 ஆயிரத்து 825. பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 81 ஆயிரத்து 7 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 201 ஆகும்.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 26 லட்சத்து 81 ஆயிரத்து 727 வாக்காளர்கள் இருந்தனர். அதில் இறப்பு, இடமாற்றம், ஒரு முறைக்கும் மேலான இடங்களில் பதிவுகள் என பல்வேறு காரணங் களால் 10 ஆயிரத்து 768 பேர் நீக்கப்பட்டனர். புதிய வாக்காளர்களாக 42 ஆயிரத்து 74 நபர்கள் சேர்க்கப் பட்டுஉள்ளனர்.
குறைவான வாக்காளர்கள்
மாவட்டத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைவான வாக்காளர்கள் இருக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1,163 இடங்களில் 2 ஆயிரத்து 718 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story