பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 1:11 AM IST (Updated: 6 Jan 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.

மதுரை, 
மதுரை மாடக்குளம் மெயின் ரோடு அருட்பெரும்ஜோதி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 62). இவருடைய மனைவி அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவர் பின்னால் வந்துள்ளார். அவர் திடீரென்று சக்திவேல் மனைவி அணிந்து இருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது அவர் சங்கிலியை இறுக்கி பிடித்துக்கொண்டதில்  3 பவுன் சங்கிலி யுடன் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story