சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்


சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2022 1:17 AM IST (Updated: 6 Jan 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சூரமங்கலம்:-
ஊதிய பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்தி சேலம் உருக்காலை ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
சேலம் உருக்காலை மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உருக்காலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி சேலம் உருக்காலையில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஊதிய ஒப்பந்தம்
சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாலாஜி, துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும், ஏற்கனவே வழக்கத்திலுள்ள பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும், புதிய ஊதிய அட்டவணை உருவாக்கப்பட வேண்டும், புதிய பதவி உயர்வுக்கான கிரேடு ஏற்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும் போது, ‘சேலம் உருக்காலையில் 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கிறது. அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story