பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு


பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

பெரம்பலூர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
 அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,00,795 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,71,820 வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 72 ஆயிரத்து 615 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
புதிய வாக்காளர்கள்
அதன் பின்னர் கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் 2,641 ஆண் வாக்காளர்களும், 3,360 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கை (இதரர்) 6 வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 2,411 ஆண் வாக்காளர்களும், 3,197 பெண் மற்றும் இதரர் 3 வாக்காளர்களும் என மொத்தம் 11,618 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
1,628 வாக்காளர்கள் நீக்கம்
 இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் தொகுதியில் 610 ஆண் வாக்காளர்களும், 575 பெண் வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 220 ஆண் வாக்காளர்களும், 223 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,628 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி மையங்களில் 1,48,330 ஆண் வாக்காளர்களும், 1,57,259 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,05,617 வாக்காளர்கள் உள்ளனர். 
இதேபோல, குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 1,36,226 ஆண் வாக்காளர்களும், 1,40,746 பெண் வாக்காளர்களும், 16 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 988 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 605 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், தாசில்தார் (தேர்தல் பிரிவு) சீனிவாசன் மற்றும் அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story