இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 89 ஆயிரத்து 535 ஆகும்.
1.11 2021 முதல் 30.11.2021-ந் தேதி வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தில் புதிதாக 23,130 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் ஆக மொத்தம் 5,558 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1.11.2021-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 17,572 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பெண்கள் அதிகம்
7 சட்ட மன்ற தொகுதிகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். 2022-ன் போது வாய்ப்பினை தவற விட்டோர் மற்றும் 1.1.2022 அன்று 18 வயதினை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விரும்பும் அனைவரும் 6-1-2022-ந் தேதிக்கு பின் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் தொடர் மேம்பாட்டு காலத்தில் இணையதளம் வாயிலாக உரிய படிவங்களை பூர்த்தி செ ய்ய வேண்டும்.
பின்னர் இந்த விண்ணப்பத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்ட, கோட்ட, நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
Related Tags :
Next Story