நள்ளிரவில் விருதுநகருக்கு அழைத்து வரப்பட்ட ராஜேந்திரபாலாஜி
கர்நாடகத்தில் கைதாகி விருதுநகருக்கு நேற்று நள்ளிரவில் ராேஜந்திர பாலாஜி அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீஸ் டி.ஐ.ஜி., சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.
விருதுநகர்,
கர்நாடகத்தில் கைதாகி விருதுநகருக்கு நேற்று நள்ளிரவில் ராேஜந்திர பாலாஜி அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீஸ் டி.ஐ.ஜி., சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.
பண மோசடி வழக்கு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார். நேற்று நள்ளிரவில் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குற்ற தடுப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வரப்படலாம் என்ற தகவல் வெளியானதும் அங்கு அ.தி.மு.க.வினர் திரள தொடங்கினர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளும் அங்கு வந்தனர். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வினர் ராஜேந்திர பாலாஜி கைதை கண்டித்து போராட்டம் நடத்தலாம் என்பதால், அங்கிருந்த அனைவரையும் கலைந்து செல்லும் படி போலீசார் தெரிவித்தனர். ஆனால் ராஜவர்மன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 20 பேர் அங்கிருந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை
இதற்கிடையே நள்ளிரவு 1.15 மணி அளவில் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதேபோல் ராஜேந்திரபாலாஜியுடன் கைதானவர்களும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்தது.
Related Tags :
Next Story