திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற 2 லாரிகள்; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற 2 லாரிகள்; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 2:54 AM IST (Updated: 6 Jan 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற 2 லாரிகளால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மரங்கள் ஏற்றிவந்த லாரி 6-வது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கிரேன் வரவழைக்கப்பட்டு பழுதான லாரி ரோட்டின் ஓரத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.
இதேபோல் தூத்துக்குடியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதை 14-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை 5 மணி அளவில் திரும்பும்போது பழுதாகி நின்றது. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு இரவு 8 மணி அளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற லாரியால் மொத்தம் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story