எருமப்பட்டி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை


எருமப்பட்டி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 6:35 AM IST (Updated: 6 Jan 2022 6:35 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள செவிந்திப்பட்டியை சேர்ந்தவர் மலையாளன். இவருடைய மகன் சரவணன் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி அழகேஸ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story