கோத்தகிரி பகுதியில் மேரக்காய் சாகுபடி தொடங்கியது
கோத்தகிரி பகுதியில் மேரக்காய் சாகுபடி தொடங்கியது
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் மேரக்காய் சாகுபடி தொடங்கி உள்ளது.
மேரக்காய்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப் பாக மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திராநகர், வ.உ.சி. நகர், ஓடேன்துறை உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் மேரக்காய் பயிரிடப் பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக பந்தல்கள் சரிந்து விழுந்து சேதமடைந்ததுடன், மேரக்காய் செடிகளும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.
சாகுபடி தொடக்கம்
இதையடுத்து விவசாயிகள் சேதம் அடைந்த பந்தல்களை சரிசெய்தது டன், மேரக்காய் செடிகளை அகற்றினார்கள். பின்னர் மீண்டும் இயற்கை உரம் கலந்து மண்ணை தயார் செய்தனர். தொடர்ந்து மேரக்காய்களை சாகுபடி செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
இந்தப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்ப தால், அவை அங்கு புகுந்து மேரக்காய் விதை காய்களை சேதப்படுத்தா மல் இருக்க, நடப்பட்ட விதையை சுற்றிலும் சாக்குப்பைகளை சுற்றி மறைத்து வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
கட்டுப்படியான விலை
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தற்போது மேரக்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்கிறது. எனவே அதன் சாகுபடி செய்யும் அளவு அதிகரித்து உள்ளது. அறுவடை நேரத்தில் மேலும் அதிக விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story