தேசிய யோகாசன போட்டி கம்பம் மாணவ-மாணவிகள் சாதனை


தேசிய யோகாசன போட்டி கம்பம் மாணவ-மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 6 Jan 2022 9:14 PM IST (Updated: 6 Jan 2022 9:14 PM IST)
t-max-icont-min-icon

தேசிய யோகாசன போட்டியில் கம்பம் மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.

உத்தமபாளையம்:
தேசிய அளவிலான யோகாசன போட்டி இணையதளம் வழியாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம் 42 பேர் கலந்து கொண்டனர். இதில் கம்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டனர். 
18 வயது முதல் 21 வயது பிரிவில் நடந்த போட்டியில் கம்பத்தை சேர்ந்த மாணவர் ராதேஸ் முதலிடத்தையும், 16 வயது முதல் 18 வயது பிரிவில் நடந்த போட்டியில் ரமணன் 4-வது இடத்தையும், இதே பிரிவில் மாணவிகளுக்கு நடந்த போட்டியில் ஸ்ரேயா 5- வது இடத்தையும், 10 வயது முதல் 15 வயது பிரிவில் சூர்யா 5-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளை உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா பாராட்டினார். அப்போது யோகா பயிற்சியாளர்கள், ராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story