குடும்பத்தினருடன் தொழிலாளி தர்ணா
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல்;
நத்தம் தாலுகா வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. நேற்று இவர், தனது மனைவி மலர் மற்றும் குடும்பத்தினருடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்புக்காக நின்ற போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுடைய உறவினரான ஆனந்தன், அவருடைய மகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். மேலும் புகார் மனு கொடுப்பதற்காக உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story