குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அழகம்மாள் புரத்தில் முத்துக்குமார், பெருமாயி உள்ளிட்ட ஏழு குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக முறையாக கைக்குறிச்சி பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை. குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏழு குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story