பஞ்சாப் அரசு உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்


பஞ்சாப் அரசு உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2022 10:30 PM IST (Updated: 6 Jan 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத பஞ்சாப் அரசு உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி, ஜன.
பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத பஞ்சாப் அரசு உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக படுகொலை
பஞ்சாப் மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு சென்ற பிரதமர் மோடியை அரசியல் நாகரிகம் இல்லாமல் தடுத்து நிறுத்தியதுடன் ஜனநாயக படுகொலை செய்து  போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து பஞ்சாப் மாநில அரசும், போலீசாரும் பிரதமரை தாக்கும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு மாபெரும் இழுக்காகும்.
அரசியல் நாகரிகம் மறந்து பிரதமரின் காரை மறித்து அவரது பயணத்துக்கு போராட்டக்காரர்கள் என்ற பெயரில் புல்லுருவிகள் செய்திருக்கும் இந்த செயலை கண்டு நாடே வெட்கி தலைகுனிகிறது.
ராஜினாமா செய்யவேண்டும்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு இந்த அநாகரிக செயலுக்கு முழு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் செயலை புதுவை மாநில பா.ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பிரதமரை வரவேற்ககூட செல்லாத பஞ்சாப் முதல்-அமைச்சரின் பண்பாடற்ற இந்த ஒரு செயல் மூலமே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். கொள்கை ரீதியாகவும், கோட்பாடு ரீதியாகவும் அரசின் செயல்பாடு இருக்கவேண்டுமே தவிர அதை வன்முறையால் வென்றிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பயணித்துக்கொண்டுள்ளது.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஜனநாயகத்தை வென்றிடலாம் என்று காங்கிரஸ் போடும் தப்பு கணக்கு மக்கள் மன்றத்தில் ஒருபோதும் எடுபடாது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலே பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Next Story