விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். திருக்கோவிலூர் அருகே வடமருதூரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஜெயமூர்த்தி (20). இவருடைய பாட்டி வீடு கோனூரில் உள்ளது.
இதனால் ஜெயமூர்த்தி அடிக்கடி தனது பாட்டி வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது அவருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் அந்த மாணவியை ஜெயமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்மாணவி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதையறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜெயமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story