ஓடும் பஸ்சில் 33½ பவுன் நகை மாயம்
திருப்பூர் அருகே ஓடும் பஸ்சில் பயணியின் பையில் இருந்த 33½ பவுன் நகை மாயமானது.
பெருமாநல்லூர்
திருப்பூர் அருகே ஓடும் பஸ்சில் பயணியின் பையில் இருந்த 33½ பவுன் நகை மாயமானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருமணத்துக்கு சென்றனர்
ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் முகமதுஆரிப் (வயது 28). இவர் ஈரோட்டில் உள்ள தனது தந்தையின் துணி கடையை கவனித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கோவையில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள முகமது ஆரிப் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டார்.
இதற்காக ஈரோட்டிலிருந்து கோவைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். மேலும் திருமணத்துக்காக 33½ பவுன் நகை மற்றும் துணிகள் இருந்த பையை பஸ்சில் தான் அமர்ந்து இருந்த இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் வைத்து இருந்தார்.
ஓடும் பஸ்சில் நகை மாயம்
அவர்கள் வந்த பஸ் புதிய திருப்பூர் அருகே வந்த போது நகை வைத்திருந்த பையை பார்த்தார். ஆனால் அந்த பை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ஆரிப் உடனடியாக கூச்சல் போட்டு பஸ்சை நிறுத்தும் படி கூறினார். பஸ் நின்றவுடன் பஸ் முழுவதும் தனது நகைகள், துணிகள் வைத்திருந்த பையை தேடிப்பார்த்தார். நீண்ட நேரம் தேடியும் அந்த பை கிடைக்கவில்லை. இதனால் ஓடும் பஸ்சில் மர்ம ஆசாமி நகை இருந்த பையை அபேஸ் செய்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக பெருமாநல்லூர் போலீசில் முகமது ஆரிப் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புதிய திருப்பூருக்கு முன்னதாக உள்ள நிறுத்தங்களில் யாராவது அந்த பையுடன் இறங்கினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story