தரைமட்ட பாலத்தை உயர்த்திக் கட்ட பொதுமக்கள் கோரிக்கை


தரைமட்ட பாலத்தை உயர்த்திக் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2022 10:56 PM IST (Updated: 6 Jan 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே, தரைமட்ட வழுக்குப் பாலத்தை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டடம்
குண்டடம் அருகே, தரைமட்ட வழுக்குப் பாலத்தை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைமட்ட பாலம்
குண்டடத்தை அடுத்த எரகாம்பட்டியிருந்து ஒட்டபாளையம் செல்லும் ரோட்டில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தப் பகுயில் பெய்த மழை காரணமாக ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. கடந்த 2மாதமாகவே ஓடையில் தண்ணீர் சென்று வருவதால் தரைப்பாலத்தில் பாசி படிந்துவிட்டது.
 இதனால் இரண்டு சக்கர வாகனங்கள்,  கால்நடைகள் இந்தப் பாலத்தை கடந்து செல்லும்போது வழுக்கி விழுந்து விடுகின்றன.. கடந்த 2 மாதத்தில்  5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன வித்து ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் சென்றவர்கள்  வழுக்குப் பாலத்தில் விழுந்து காயமடைந்து சென்றுள்ளனர். தவிர விவசாயிகளின் மாடுகளும் இந்த வழுக்குப் பாலத்தை கடக்கும்போது வழுக்கி விழுந்துள்ளன. 
உயர்த்தி கட்ட வேண்டும்
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை ஆய்வு செய்து ஓடையில் தண்ணீர் நின்றவுடன் பாலத்தை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story