‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Jan 2022 10:58 PM IST (Updated: 6 Jan 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:


குடியிருப்புகள் அருகே எரிக்கப்படும் குப்பைகள்
திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி என்.ஜி.ஓ. காலனி, சி.டி.ஓ. காலனிக்கு இடையே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கபிலன், என்.ஜி.ஓ.காலனி.

குப்பை தொட்டி வைக்க வேண்டும்
திண்டுக்கல் மெயின் ரோட்டில் குப்பை தொட்டி வைக்கப்படாததால் சாலையோரத்தில் குப்பைகளை போட்டுச்செல்கின்றனர். இந்த குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மெயின் ரோட்டில் குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமன், திண்டுக்கல்.

தெருநாய்கள் தொல்லை
பழனி சண்முகபுரத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், சண்முகபுரம்.

பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?
பழனி பஸ் நிலையத்தில் இருந்து குளத்து ரோடுக்கு பஸ்கள் செல்லும் பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் போது பள்ளங்களில் இறங்கி செல்கிறது. அப்போது பஸ்கள் குலுங்குவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பழனி.


Next Story