சிப்காட்டில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து


சிப்காட்டில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து
x
தினத்தந்தி 6 Jan 2022 11:38 PM IST (Updated: 6 Jan 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ராணிப்பேட்டை

பெங்களூருவிலிருந்து கியாஸ் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்னை- மும்பை சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று இதே சாலையில் சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை சிப்காட் அருகே 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் லாரிகளை ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த சின்னராஜ் (வயது 35), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கனா கவுடா (37) ஆகிய 2 டிரைவர்களும் காயமடைந்தனர். இருவரும் வாலாஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இ்ந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. 

Next Story