தீவிபத்தில் சலவைக்கடை எரிந்து நாசம்
பொறையாறில் தீவிபத்தில் சலவைக்கடை எரிந்து நாசமானது. இதன் ேசதம் மதிப்பு ரூ.1 லட்சம் எனக்கூறப்படுகிறது
பொறையாறு:
பொறையாறில் தீவிபத்தில் சலவைக்கடை எரிந்து நாசமானது. இதன் சேதம் மதிப்பு ரூ.1 லட்சம் எனக்கூறப்படுகிறது
தீயில் சலவைக்கடை எரிந்து நாசம்
பொறையாறு அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 55). இவர் பொறையாறு தோட்டம் மேலவீதியில் சலவை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அன்று இரவு 11 மணி அளவில் கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர். பொறையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்களின் வேட்டி, சட்டை, சேலை, ரூ.5 ஆயிரம்், ஆதார் அட்டை வங்கி பாஸ் புத்தகம், இஸ்திரி பெட்டி ஆகியன எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story