செல்லன் ஆற்றின் முகத்துவாரத்தை ராமலிங்கம் எம்.பி. படகில் சென்று ஆய்வு
நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள செல்லன் ஆற்றின் முகத்துவாரத்தை ராமலிங்கம் எம்.பி. படகில் சென்று ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:
நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள செல்லன் ஆற்றின் முகத்துவாரத்தை ராமலிங்கம் எம்.பி. படகில் சென்று ஆய்வு செய்தார்.
ராமலிங்கம் எம்.பி. ஆய்வு
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர்குப்பம், மடத்துகுப்பம் மற்றும் சாவடிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனை தடுத்திட கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜெய்சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கம் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தார். இதனையடுத்து நேற்று ராமலிங்கம் எம்.பி., நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்திற்கு வந்தார். பின்னர் பக்கிங்காம் கால்வாய் வழியாக படகில் சென்று செல்லன் ஆற்றின் முகத்துவாரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் முகத்துவாரத்தில் கருங்கல் தடுப்பு சுவர் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ரூ.3 கோடியில்...
இதையடுத்து எம்.பி. கூறுகையில், கருங்கல் தடுப்பு சுவர் அமைத்திட ரூ.3 கோடியில் மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சீர்காழி மீன்வளத்துறை துணை இயக்குனர் சண்முகம், துறைமுக திட்ட பொறியாளர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மோகனாஜெயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து மடத்து குப்பம், சாவடிகுப்பம் ஆகிய கிராமங்களில் கடல் அரிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story