சேந்தமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது


சேந்தமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 6 Jan 2022 11:56 PM IST (Updated: 6 Jan 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கபிலன் (வயது 22). இவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு முட்டை கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கும், பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் மாணவிக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் மாணவியை கணவர் வீட்டில் சரிவரை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குழந்தைகள் நல குழுமத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் இரு குடும்பத்தினரையும் பலமுறை விசாரணைக்கு அழைத்தும் அவர்கள் உடன்படவில்லை. இதனால் குழந்தைகள் நல குழுமத்தினர் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரையடுத்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி நேற்று கபிலனை கைது செய்தனர். மேலும் 18 வயது பூர்த்தி அடையாமல் பிளஸ்-1 படித்த மாணவியை திருமணம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Next Story