நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:59 PM IST (Updated: 6 Jan 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

வேலூர்

வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், திருவலம், பென்னாத்தூர் பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குபதிவு எந்திரங்கள் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 646 வாக்குச்சாவடிகளில் 20 சதவீதம் கூடுதலாக எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 779 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 779 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது.

அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு மின்னனு வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யும் பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Next Story