மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 6 Jan 2022 6:52 PM GMT (Updated: 2022-01-07T00:22:20+05:30)

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.

குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.
மின்சாரம் தாக்கி ெதாழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 30). கூலி தொழிலாளியான இவர், புதிய வீடுகட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பார்த்தசாரதி புதிய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவருடைய கை மின்சார வயரில்பட்டு அவர் தூக்கி எறியப்பட்டார்.  
 உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி துர்கா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story