ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி கைது
பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியை நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்தனர். இதையடுத்து அவர் நள்ளிரவில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் உடல் பரிசோதனை செய்த பின்பு நேற்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
15 நாட்கள் காவல்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாட்கள் அதாவது வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ராஜேந்திர பாலாஜிைய வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து சிறை வளாகத்திற்குள் அழைத்துசெல்லப்பட்ட ராஜேந்திரபாலாஜியை நிர்வாக காரணங்களை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்படுவதை முன்னிட்டு நீதிமன்ற பகுதியில் 5 இடங்களில் தடு்ப்புகள் அமைக்கப்பட்டன. அத்துடன் நீதிமன்ற பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story