பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
பஞ்சாப் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி காரில் சென்றார். அப்போது மேம்பாலம் ஒன்றில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமரின் கார் 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் பஞ்சாப் அரசு பிரதமரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லையென கூறி அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. கட்சி நிர்வாகிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். கிழக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சீத்தாராம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயராஜ், ராஜா, மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் டாஸ்வின் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story