கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்


கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jan 2022 1:15 AM IST (Updated: 7 Jan 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.

வள்ளியூர்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அணு உலைகள்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பாதிப்பு
இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது அணு உலையில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story