தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Jan 2022 1:32 AM IST (Updated: 7 Jan 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது
 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு டவுன் தெலுங்கதெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் இருந்தது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தன. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலை இருந்தது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், ஒரத்தநாடு.
தெருவிளக்கு வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், சாலையில் விஷப்பூச்சிகள் கிடந்தாலும் கூட தெரிவதில்லை. இதன் காரணமாக தெருவாசிகள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ்க்கை வடக்கு தெருவில் தெரு விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-வாழ்க்கைவடக்குதெருவாசிகள், தஞ்சை.
குப்பைகள் அகற்றப்படுமா?
 தஞ்சை மாநகராட்சி 44-வது வார்டு நாகம்மாள் நகரில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி நாய்கள், மாடுகள் அதிகளவில் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாகம்மாள்நகர் மக்கள், தஞ்சை.
 நாய்கள் தொல்லை
கும்பகோணம் பகுதி மேம்பாலம் இறக்கம், நீடாமங்கலம் சாலை, காரைக்கால் சாலை, கஸ்தூரிபாய் சாலை, விவேகானந்தா நகர் ஆகிய இடங்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகளை அவ்வப்போது கடித்து விடுகிறது. எனவே, பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கல்யாணசுந்தரம், கும்பகோணம்.

Next Story