நள்ளிரவில் வீடு புகுந்து கத்திமுனையில் 60 பவுன் நகை கொள்ளை


நள்ளிரவில் வீடு புகுந்து கத்திமுனையில் 60 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 7 Jan 2022 1:33 AM IST (Updated: 7 Jan 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்திமுனையில் 60 பவுன் நகையை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.

மேலூர், 
மேலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்திமுனையில் 60 பவுன் நகையை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.
கொள்ளை கும்பல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் கிராமத்தில் வசிப்பவர் கோபி (வயது30). இவர் வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பி கடந்த 6 மாதங்களாக கிராமத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் கதவை உடைத்து திடீரென முகமூடி அணிந்து 4 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு எழுந்த கோபி மற்றும் அவர்களது குடும்பத் தினரை கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கோபி, அவரது தாய் இந்திரா மற்றும் மனைவி, குழந்தையை ஒரு அறையில் வைத்து பூட்டி அவர்கள் அணிந்து இருந்த நகைகள், குழந்தையின் நகைகள் உள்ளிட்ட 60 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்று விட்டது. 
கொள்ளையர்கள் செல்லும்போது குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றதால் வெளியே வர முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். இதைகேட்டு அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்து பூட்டை உடைத்து குடும்பத்தினரை மீட்டனர். 
விசாரணை
இதன் பின்னர் மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் நேரில் விசாரணை நடத்தினார். அதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதுக்கு மிகாமல் இருந்ததாகவும் முகமூடி அணிந்து வந்து பயங்கர ஆயுதங்களை காட்டி தங்களை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாக கோபியின் தாயார் இந்திரா தெரிவித்தார். 
இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story