ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களில் 51 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களில் 51 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு
உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 3-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிக்கூடங்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 மாணவ-மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு பள்ளிக்கூடங்களிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாணவ -மாணவிகளும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று 4-வது நாளாக தொடர்ந்து சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 15 வயது முதல் 18 வயதுடைய 51 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story