சாலை விரிவாக்க பணிக்கு பாறைகள் அகற்றம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
ஊட்டி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவாமல் இருக்க அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையான நேற்று வழிபாட்டு தலங்கள் அரசு உத்தரவை பின்பற்றி மூடப்பட்டு இருந்தன. ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தடுப்பு நடவடிக்கையாக நடை சாத்தப்பட்டது.
அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. நுழைவுவாயில் மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சுப்பிரமணிய சுவாமி கோவில், எல்க்ஹில் முருகன் கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டன.
வழிபாட்டு தலங்கள் மூடல்
ஊட்டி லோயர் பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசல் மூடப்பட்டு இருந்தது. அதன் முன்பு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொழுகைக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் சி.எஸ்.ஐ. ஸ்டீபன் ஆலயம், வெஸ்லி ஆலயம், தாமஸ் ஆலயம், தூய திரித்துவ ஆலயம் மற்றும் புனித மரியன்னை ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்கள் மூடப்பட்டன.
நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story