திண்டுக்கல் அருகே அரசு பஸ் சிறை பிடிப்பு
திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சியில் கொட்டப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் போக்குவரத்திற்காக ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு கொட்டப்பட்டி வழியாக கன்னிவாடி செல்கிறது. பின்னர் கன்னிவாடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்வதற்காக கொட்டப்பட்டிக்கு தினமும் காலை 9.30 மணிக்கு வருகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், தொழிலாளர்கள் பணிக்கு செல்வதிலும் தாமதம் ஆகிறது. இதையடுத்து காலை 8.30 மணிக்கு கொட்டப்பட்டிக்கு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டு நேற்று காலை அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story